அப்துல் கலாம் 94 வது பிறந்த நாள் விழாவை
1000 பனைவிதைகள் விதைத்து பிறந்த நாள் கொண்டாடிய பசுமை நண்பர்கள் 

அப்துல் கலாம் 94 வது பிறந்த நாள் விழாவை 1000 பனைவிதைகள் விதைத்து பிறந்த நாள் கொண்டாடிய பசுமை நண்பர்கள்  அக்.15 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 94 வது பிறந்த நாளை 1000 பனைவிதைகள் விதைத்து பிறந்த நாள் கொண்டாடிய டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நண்பர்கள் . அறக்கட்டளை தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார்.து.தலைவர் உமேஷ் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார் . சிறப்பு விருந்தினர்களை சக்தி வரவேற்றார். அப்துல் கலாம் அவர்களை பற்றி தேவகுமார் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தே.பிரபாகரன் . வழக்கறிஞர்.ஏ.சிதேவகுமார்.. ரேட்டரிசங்க தலைவர்.பாஸ்கர். மற்றும் பத்திரிகை நண்பர்கள்.  அமீன் .நாகராஜ்.  வெங்கடேசன். ராஜேஷ்.  சரவணன் துபேல். ஆகியோர் கலந்து கொண்டு பனவிதை பசுமை நண்பர்கள் விதைத்தனர்...    பிறந்த நாள் விழாவிற்கு வருகை புரிந்த அணைவருக்கும் சுரேஷ் நன்றி தெரிவித்தார்... .