உலக பூமி தினம், 22 ஏப்ரல் 2025  முக்கியத்துவமும் & வரலாறும்.

உலக பூமி தினம், 22 ஏப்ரல் 2025  முக்கியத்துவமும் & வரலாறும்.   உலக பூமி தினம் (WED) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும் , இது கடந்த 53 ஆண்டுகளாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளின் முந்தைய இலக்குகளின் சாதனைகளை கௌரவிக்கும். பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பையும் மனிதகுலத்துடனான அதன் உறவையும் பாதுகாக்க பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் . இன்று. வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை எம் டி செந்தில்குமார் அவர்களின் முன்னிலையில் அரசு மருத்துவர் எலும்பு முறிவு பிரிவு டேவிட் மற்றும் பொது மருத்துவர் முன்னிலையில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நண்பர்களுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்யப்பட்டது. பிறகு பூமி தினத்தில் அரசு மருத்துவர் தே. செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஒரு மரம் நடவு செய்தால் வருகின்ற பருவ நிலை மாற்றத்தை நாம் எளிதாக கடக்க முடியும் இல்லையெனில் மாபெரும் இயற்கை இடர்பாடுகளில் சிக்க வேண்டி இருக்கும் என கூறினார். .