டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளில் 93 மரக்கன்றுகள் நடும் விழா.
டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளில் 93 மரக்கன்றுகள் நடும் விழா. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்த நாளில் 93 மரக்கன்றுகள் நடவு செய்து பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையினர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி முத்தமிழ் மன்ற தலைவர் நா.பிரகாசம். வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட துணை தலைவர் .தேவக்குமார்.. பாலிமர் தொலைக்காட்சி நிருபர்.விஜய்குமார். மற்றும் கனவாய் புதூர் ஊராட்சி தலைவர் பழனி.ஆகியோர் முன்னிலையில் பசுமை கனவாய் புதூர் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது... பசுமை விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அமைப்பாளர்களை அறக்கட்டளை தலைவர்.சேதுராமன் வரவேற்றார்... து.தலைவர் உமேஷ் விதைகள் அடங்கிய பேப்பர் பேனாக்கள் கொடுத்து வரவேற்றார். பின்னர் அறக்கட்டளை நண்பர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது... இவ்விழாவின் பசுமை நண்பர்கள் சுரேஷ் சக்தி அசோக் ரகு தமிழரசன் நரேன் வெங்கடேஷ் பிரதாப் திருப்பதி திவாகர் கிருஷ்ணமூர்த்தி உதயன் மற்றும் முரளி ஆகியோர் விழாவை முன்னின்று சிறப்பித்தனர் இறுதியில் வருகை புரிந்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.... .
Leave a Reply