தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு: டெல்லி: மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500க்கும் வீரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு 1. ரோஹித் ஷர்மா( கிரிக்கெட்) 2. தமிழக வீரர் மாரியப்பன்(தடகளம்) 3. மனிகா பத்ரா( டேபிள் டென்னிஸ்) 4. விக்னேஷ் போகத்( காலஞ்சென்ற மல்யுத்தம்) 5. ராணி ராம்பால்( ஹாக்கி) வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியா விருது 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1. தர்மேந்திரதிவாரி( வில்வித்தை) 2. புருஷோத்தம்ராய்( தடகளம்) 3. ஓம்பிரகாஷ் தாகியா( மல்யுத்தம்) 4. சிவ்சிங்(குத்துச்சண்டை) 5. ஹாக்கி பயிற்சியாளர் ரொமேஷ் பதானியா 6. கபடி பயிற்சியாளர் கிருஷணகுமார் ஹுடா 7. விஜய் பாலச்சந்திர முனீஸ்வர( வலு தாக்குதல்) 8. நரேஷ்குமார்(டென்னிஸ்) விளையாட்டு துறையின் பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயான் சந்த் விருதும் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.29-ல் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார். .