நாளை முதல் பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

நாளை முதல் பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்:   சென்னை : பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ல் தொடங்கி 24ம் தேதி முடிந்தது. அன்று தான் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் இறுதி தேர்வை மட்டும் எழுதவில்லை. அவர்களுக்கு கடந்த மாதம் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், மொத்தமாக 92.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவியர் 94.80 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் பெற்றனர். வழக்கம் போல மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபின் மறுக்கூட்டல், மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமே பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன் நகலை வரும் 21ம் தேதி முதல் ஆக.,25ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .