நகரங்களை விட கிராமங்களில் விலைவாசி அதிகரித்தது!!

நகரங்களை விட கிராமங்களில் விலைவாசி அதிகரித்தது!!   நுகர்வோர் பணவீக்கத்தின்(Consumer Price Inflaation) ஜூலை 2020 காண கணக்குகள் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார். ஜூலை2020  நுகர்வோர் பணவீக்கம் 6.3% ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் 2020 மாதம் நுகர்வோர் பணவீக்கம் 23% சதவீதமாக இருந்தது. ஆனால் ஜூலை 2020 இல் இந்தியாவின் நகர்ப்புறங்களில் பணவீக்கம் 5% சதவிகிதமாகவும் கிராமப்புறங்களில் 7.4% சதவீதமாகவும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 2020 காண நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்து பணவீக்கம் 9.62% சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஜூன் 2020  பணவீக்கம் நுகர்வோர் உணவு பணவீக்கம் 8.72% சதவிகிதமாக இருந்தது. மேலும் இந்தியாவின் நகர்ப்புறங்களில் உணவு பணவீக்கம் 9.05% சதவீதமாகவும்  கிராமப்புறங்களில் 9.89% சதவிகிதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 2020 இந்திய மாநிலங்களுக்கான சராசரி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முட்டை  8.79% மீன் இறைச்சி  18.81% எண்ணெய் & கொழுப்புகள்  12.41%% தானியங்கள் 6.96% பழங்கள்  0.13% காய்கறிகள்  11.29%% பருப்பு வகைகள் 15.92% சர்க்கரை 3.60 % எரிபொருள் 2.80 % மசாலா பொருட்கள் 13.27 % அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் அறிக்கை 6.96% சதவிகிதமாக தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்திற்கு மட்டும் என மட்டும் வைத்தாலும் நுகர்வோர் பணவீக்கம் 7.24% சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவைப் போலவே தமிழகத்தில் நகர் புறத்தை விட கிராமப் புறத்தில் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. .