பட்ஜெட் விலையில் புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்
பட்ஜெட் விலையில் புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்: லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லாவா நிறுவனம் இசட்66 எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லாவா ஸ்மார்ட்போனில் 6.08 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்பிரெட்ரம் ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் புதிய லாவா இசட்66 மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருகிறது. கேமராக்களை பொருத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி டெப்த் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி 2.0 மற்றும் 3950 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. லாவா இசட்66 சிறப்பம்சங்கள்: - 6.08 இன்ச் 1560x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பிரெட்ரம் ஆக்டாகோர் பிராசஸர் -3 ஜிபி DDR4 ரேம் - 32 ஜிபி மெமரி - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி - ஆண்ட்ராய்டு 10 - டூயல் சிம் ஸ்லாட் - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 - 5 எம்பி கேமரா - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் - மைக்ரோ யுஎஸ்பி 2.0 - 3950 எம்ஏஹெச் பேட்டரி புதிய லாவா இசட்66 ஸ்மார்ட்போன் மரைன் புளூ, பெரி ரெட் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7777 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது. .
Leave a Reply