பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது
சென்னை: தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது .
Leave a Reply