48 எம்பி குவாட் கேமராக்கள் கொண்ட ரியல்மி 6ஐ அறிமுகம்
ரியல்மி 6ஐ ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது ரியல்மி ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த எடிஷன் ஆகும். புதிய ரியல்மி 6ஐ மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 6ஐ மாடல் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 6ஐ சிறப்பம்சங்கள் - 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் - 800MHz மாலி-G76 3EEMC4 GPU - 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம் - 64 ஜிபி (UFS 2.1) மெமரி - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி - டூயல் சிம் ஸ்லாட் - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ - 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்இடி ஃபிளாஷ், EIS - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3 - 2 எம்பி டெப்த் சென்சார் - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4 - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.00 - பக்கவாட்டில் கைரேகை சென்சார் - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 - யுஎஸ்பி டைப் சி - 4300 எம்ஏஹெச் பேட்டரி - 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி வெர்ஷன் விலை ரூ. 12999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது. .
Leave a Reply