அமெரிக்காவில் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்
ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 லட்சத்து 94 ஆயிரத்து 360 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- அமெரிக்கா - 38,96,855 பிரேசில் - 20,99,896 இந்தியா - 10,77,618 ரஷியா - 7,71,546 தென் ஆப்பிரிக்கா - 3,64,328 பெரு - 3,53,590 மெக்சிகோ - 3,38,913 சிலி - 3,30,930 ஸ்பெயின் - 3,07,335 இங்கிலாந்து - 2,94,792 ஈரான் - 2,73,788 பாகிஸ்தான் - 2,63,496 சவுதி அரேபியா - 2,50,920 இத்தாலி - 2,44,434 துருக்கி - 2,19,641 ஜெர்மனி - 2,02,845 .
Leave a Reply