கொரோனா பாதிப்பு: உலக அளவில் 1.44 கோடியை தாண்டியது
ஜெனிவா சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவது 1 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 819 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 52 லட்சத்து 6 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 910 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 86 லட்சத்து 11 ஆயிரத்து 236 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- அமெரிக்கா - 38,33,017 பிரேசில் - 20,75,124 இந்தியா - 10,38,716 ரஷியா - 7,65,437 தென் ஆப்பிரிக்கா - 3,50,879 பெரு - 3,49,500 மெக்சிகோ - 3,31,298 சிலி - 3,28,846 ஸ்பெயின் - 3,07,335 இங்கிலாந்து - 2,94,066 ஈரான் - 2,71,606 பாகிஸ்தான் - 2,61,916 சவுதி அரேபியா - 2,48,416 இத்தாலி - 2,44,216 துருக்கி - 2,18,717 ஜெர்மனி - 2,02,572 வங்காளதேசம் - 2,02,066 .
Leave a Reply