வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசின் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்தனர்.
கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் தமிழக அரசு நோய் தொற்று கட்டுபடுத்தும் வகையில் ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. இதன் காரணமாக வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அணைத்து கடைகள் மூடி இருந்தன. பெட்ரோல் நிலையங்கள் இயங்க வில்லை. சாலைகள் வெறுச்சோடி காணப்பட்டது. .
Leave a Reply