தமிழ்நாட்டில் இன்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை 3½ மணி நேரம் தெரிந்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் அழகை ரசித்து பார்த்தனர்.
ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் வெளியிட்ட அறிவிப்பை கேலி செய்த டிரம்ப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.